மழலையர், தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்

மழலையர், தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று சிஇஓ தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் ஆதரவற்றவர், எச்ஐவியினால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அவரவர் இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் 201718ம் கல்வியாண்டிற்கு சேர்க்கை பெறும் பொருட்டு www.dge.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

அந்தந்த ஒன்றியங்களிலுள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள், வட்டார வள மைய அலுவலகங்கள், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட அலுவலகம் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் குடியிருப்புக்கான சான்றுகள், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை, சாதி, வருமானச் சான்றிதழ் மற்றும் மாணவர்களின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஆகிய விவரங்களுடன் இலவசமாக விண்ணப்பங்களை இன்று(20ம் தேதி) முதல் அடுத்த மாதம்(மே) 18ம் ேததி வரை இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.

மேலும் தாலுகா அலுவலகங்களிலுள்ள இசேவை மையங்களிலும் மேற்கண்ட சேர்க்கை கோரும் பெற்றோர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். மேலும் பெற்றோர்கள் மேற்குறிப்பிட்ட அலுவலகங்களிலும் மற்றும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளிலும் சேர்க்கை வழங்கும் மொத்த இடங்கள் மற்றும் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் இதர விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் தகவல் பலகையில் ஒட்டப்பட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!