திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமிய அஞ்சலக ஊழியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிராமிய அஞ்சலக ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சந்திரேசேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தபால் துறையில், திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள 40 கிராமிய அஞ்சலக ஊழியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு மற்றும் அதற்க்கு சமமான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், விருப்பம் உள்ளவர்கள் வரும் 8ம் தேதிக்குள் www.indiapost.gov.in, appost.in/gdsonline என்ற இணையளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதுகுறித்த தகவல்களுக்கு தபால் அலுவலகத்திலோ அல்லது இணையதளம் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!