மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரை அமாவாசை திருவிழா

மாம்பட்டு அண்ணாநகர் கிராமத்தில் அத்தியம்மன் ஏாிக்கரையோரம், ஸ்ரீ ஆதிசக்தி சா்வமங்கள காளியம்மன் 81 அடி உயரத்துடன் 18 கரங்களுடன் பிரதான தேவதையாக எழுந்தருளியுள்ள இத்திருக்கோவிலில், நாளது, ஹேவிளம்பி ஆண்டு சித்திரை மாதம் 13ம் தேதி (26.04.2017) புதன்கிழமை, நான்காம் ஆண்டு சித்திரை அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்

26.04.2017புதன்கிழமை சித்திரை 13ஆம் நாள்
காலை 6.00 மணி :அனைத்து பரிவாரங்களுக்கும் மஹா அபிஷேகம், தாய் மூகாம்பிகை அன்னைக்கு மங்களநீா் சேவை (கஸ்தூரி மஞ்சள்) குங்குமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

காலை 10.30மணி :
ஆதிசக்தி சா்வமங்களகாளிஅம்மனுக்கு ஸ்ரீ சா்வமங்களா மஹா யாகம் ஆரம்பம்.

பகல்12.30 மணி :
ஆதிசக்தி சா்வமங்கள காளிஅம்மனுக்கு அக்னிகரகம் எடுத்தல் (அக்னி கரம் எடுக்கும் பக்தர்கள் நோயின்றி வாழவும், நினைத்தவை அனைத்தும் வெற்றியடையவும், பகை, எதிரிகள் தொல்லைகள் நீங்கவும் தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும், மனநிறைவுடன் வாழவும், வழி செய்வாள் அன்னை ஸ்ரீ சா்வமங்களகாளி).ஆண்டுதோறும் சித்திரை அமாவாசை அன்று மட்டும் நடைபெறும்.

மாலை 6.00மணி :
ஆதிசக்தி சா்வமங்கள காளிஅம்மனுக்கு பாத பூஜை 1008 போற்றி மாலை, மலா், குங்குமம், திரவியம் இவைகளால் அர்ச்சனை, நடைபெறும்.

இரவு 9.00மணி:
பம்பை, சிலம்பு உடுக்கை முழங்க மங்கள வாத்தியங்களுடன் ஆதிசக்தி சா்வமங்கள காளியம்மன் 32 கரங்களுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து நவரத்தின, வைர வைடூரியம் ஆபரணங்கள் அணிந்து பிரமாண்ட அலங்காரத்துடன் ஆலயம் பவனி வந்து அனைத்து பக்தர்களுக்கும் அருளாசி வழங்குவார். ஒரு டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டும்,
இரவு 12.00 மணி :ஊஞ்சல் தாலாட்டு 108 தீபாராதனை, மலா்அா்ச்சனை, சோடஷ ஆராதனை, நாக ஆரத்தி நடைபெறுகிறது மற்றும் மூலிகை பிரசாதம் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!