திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு 25ம் தேதி விளையாட்டு போட்டி அறிவிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் தடகளம், குழு விளையாட்டு போட்டிகள், வாலிபால், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இறகுப்பந்து போட்டி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் ஒரு மாணவர் 2 போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள வரும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து ஆளரிச் சான்றிதழ் (போனபைட் சர்டிபிகேட்) வாங்கி வர வேண்டும். சான்றிதழ் பெறாத மாணவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒரு பள்ளியிலிருந்து குழு போட்டிகளுக்கு தலா 1 மாணவர்கள் அணியும், 1 மாணவிகள் அணியும் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள், 14, 17, 19 ஆகிய வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் இதுகுறித்த மேலும், தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!