வந்தவாசியில் பாமக பொதுக்குழு கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம், வந்தவாசியில் செவ்வாய்கிழமை நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் அ.கணேஷ்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.வேலாயுதம், மாவட்ட தலைவர்கள் கி.ஏழுமலை, முக்கூர் ராமஜெயம் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் க.சீனுவாசன் வரவேற்றார். முன்னாள் எம்பிகள் மு.துரை, கோ.தன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன் உட்பட பலர் பேசினர். இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: அதிமுக தேய்பிறையில் உள்ளது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தலைமை இல்லாமல் திண்டாடுவதால் அதிமுக மூன்றாக பிரிந்துள்ளது. 1991ம் ஆண்டிலிருந்து 1996 வரை அதிமுக ஆட்சியில் பகல் கொள்ளை அடித்ததின் காரணமாக, சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கூறியதால் தற்போது சசிகலா பெங்களூர் சிறையில் உள்ளார்.

ஜெயலலிதா சமாதியிடம் சென்று திடீர் ஞானோதயம் பெற்றவர்போல் பேசும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், வெறும் ₹30 ஆயிரம் கோடி ரூபாய் தான் அவர் அமைச்சராக இருந்தபோது கொள்ளை அடித்தார். ஜெயலலிதா சமாதியிடம் சென்றதும் பன்னீர் செல்வத்தை தொடர்ந்து சசிகலா, தீபா ஆகியோர் ஜெயலலிதா ஆவியுடன் பேசியதாக கூறி தமிழக மக்களை முட்டாள் ஆக்குகின்றனர். சென்னை அடையாறில் அமுதா என்பவர் உள்ளார். அவர்தான் ஆவியுடன் பேசுவார். அவரை ஆவி அமுதா என அழைப்பார்கள். அதுபோன்று ஆவியுடன் பேசுபவரை தான் ஜெயலலிதாவின் வாரிசு என கூறினால், ஆவி அமுதாதான் ஜெயலலிதாவின் வாரிசாக வருவார். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் ஏ.பிச்சைகண்ணு, துணை தலைவர் நா.பட்டாபிராமன், தொண்டர் அணி தலைவர் கராத்தே எம்.சரவணன், இளைஞர் அணி துணை செயலாளர்கள் ரா.செல்வம், வீரபெருமாள், செயற்குழு உறுப்பினர் எல்.சங்கர்நாரயணன், சிறுபான்மை பிரிவு தலைவர் வி.கே.எம்.சையத்அலி, நகர செயலாளர்கள் சர்புதீன், தியாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் பாரதிவேலு, செம்பூர் எம்.செந்தில் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.ராஜாபாஷா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!