10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்போது, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளும், 10-ஆம் வகுப்புத் தேர்வு நடைபெறும்போது 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தங்கள் பள்ளிகளுக்கு அருகே உள்ள ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், சமுதாயக் கூடங்களில் தேர்வு நடைபெற இருக்கும் பாட ஆசிரியர்கள் மூலம் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
எனவே, அரசு பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!