சாராயம் விற்றவர்கள் கைது

வேட்டவலம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாராயம் விற்றதாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.
வேட்டவலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் போலீஸார் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கோணலூர் கிராமம், பழைய காலனியில் 60 லிட்டர் சாராயத்தை வீட்டில் பதுக்கி வைத்து விற்றதாக பஞ்சாட்சரம் மனைவி புஷ்பா (57) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, ராஜந்தாங்கல் கிராமத்தில் வீட்டில் 60 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்றதாக ரமேஷ் (38), நாரையூர் கிராமத்தில் சாராயம் விற்றதாக அமாவாசை மனைவி கருப்பாயி (49) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மொத்தம் 180 லிட்டர் சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!