செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சேர 4,150 பேர் விண்ணப்பம்

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலைப் பாடப் பிரிவுகளில் சேர 4,150 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) ஆ.மூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தக் கல்லூரியில் 2018 – 19 ஆம் கல்வியாண்டுக்கான (இளநிலைப் பாடப் பிரிவுகள்) மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 7-இல் தொடங்கி மே 30 -ஆம் தேதி வரை வழங்கபட்டன. மொத்தம் 5,667 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு, 4,150 நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரப் பெற்றன.
கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் மொத்தமுள்ள 1,692 இடங்களுக்கு கலைப் பாடப் பிரிவுகளுக்கு 1,211 விண்ணப்பங்களும், அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 2,939 விண்ணப்பங்களும் வரப் பெற்றன. இதற்கான தரவரிசைப் பட்டியல் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியிடப்படும். நேர்காணலுக்கு அழைப்புக் கடிதம் தனியாக அனுப்பப்பட மாட்டாது. கலந்தாய்வில் அசல் மூலச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பவர்கள் மட்டும் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். சேர்க்கையின் போது மாணவர்களின் பெற்றோர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!