தமிழகத்தில் 2019 முதல் பிளாஸ்டிகிற்கு தடை- தமிழக முதல்வர் அறிவிப்பு

பிளாஸ்டிக் பொருட்களை வரும் 2019, ஜனவரி 1 முதல் பயன்படுத்த தடைவிதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

உலக சுற்றுச் சூழல் தினம் உலகம் முழுவதும்
இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று(செவ்வாய்க்கிழமை) பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கப்படுவதாக அறிவித்தார்.

பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகிய பொருட்கள் தயாரிக்க தடைவிதிக்கப்படும். பால், தயிர் பாக்கெட் மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விளங்குகளின் மரணத்துக்கு பிளாஸ்டிக் பைகள் முக்கிய காரணியாக விளங்குகின்றன. இதனையடுத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்துமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!