ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம் கடைசி நாள் ஜூன் 27

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையங்களில் (50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டின் படி) கலந்தாய்வு மூலம் தொழில் பாடப் பிரிவுகளுக்கு மதிப்பெண்கள், இன ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை ஜூன் 27-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம். மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு நடைபெறும் நாள், தேதி, இடம் உள்ளிட்ட விவரங்கள் அதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
இணையதள விண்ணப்பத்தின் போது, தெரிவிக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட நாளில், திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு தகுதியான அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கல்வித் தகுதி: இரண்டாண்டு தொழில் பாடப் பிரிவுகளுக்கும் , ஓராண்டு தொழில் பாடப் பிரிவுக்கும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 14 வயது முதல் அரசு நிர்ணயத்தவாறு இருக்க வேண்டும்.
ஜமுனாமரத்தூர் ஐடிஐ:
இதேபோல, ஜவ்வாதுமலையில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர பழங்குடியின மாணவ- மாணவிகளிடமிருந்து மட்டும் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், திருவண்ணாமலை அரசு தொழில் பயிற்சி நிலையம், திருவண்ணாமலை’ என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0417-5233018 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!