திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 6ஆம் தேதி கலந்தாய்வு

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 6) தொடங்குகிறது.
இந்தக் கல்லூரியில் மொத்தமுள்ள 1,160 இளநிலைப் பாடப் பிரிவு இடங்களுக்கு 7,480 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு, 6,134 விண்ணப்பங்கள் நிறைவு செய்யப்பட்டு வரப் பெற்றன. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வருகிற ஜூன் 6-ஆம் தேதி தொடங்குகிறது.
மதிப்பெண்கள், இன சுழற்சி அடிப்படையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். எவ்வித பரிந்துரைகளும் ஏற்கப்படமாட்டாது என கல்லூரி முதல்வர் சின்னையா தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!