துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் 14 துணை வட்டாட்சியர்களை வெவ்வேறு வட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
வருவாய்த் துறையில் பணிபுரியும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்களை அவ்வப்போது பணியிட மாறுதல் செய்வது வழக்கம். அதன்படி, மாவட்டத்தில் பணிபுரியும் 14 துணை வட்டாட்சியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களின் புதிய பணியிடம் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை துணை வட்டாட்சியர் எம்.கோவிந்தராஜன் (கலசப்பாக்கம்), கலசப்பாக்கம் கே.திருநாவுக்கரசு (ஆரணி மேற்கு மண்டலம்), திருவண்ணாமலை அ.சண்முகம் (திருவண்ணாமலை தலைமையிடம்), திருவண்ணாமலை சி.முனுசாமி (செங்கம்), திருவண்ணாமலை கே.தனசேகரன் (திருவண்ணாமலை தேர்தல் பிரிவு), திருவண்ணாமலை தேர்தல் பிரிவு என்.மனோகரன் (ஜமுனாமரத்தூர் தேர்தல் பிரிவு), திருவண்ணாமலை ஜி.சுமதி (வந்தவாசி தலைமையிடம்) ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகக் கண்காணிப்பாளர் எம்.வெங்கடேசன் (ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு), ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு சு.முனிராஜன் (போளூர் தலைமையிடம்), ஆரணி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பி.துரை (ஆரணி தேர்தல் பிரிவு), போளூர் தேர்தல் பிரிவு பி.கே.ரவிச்சந்திரன் (போளூர் வட்ட வழங்கல் அலுவலர்), செங்கம் தேர்தல் பிரிவு எம்.சாந்தி (செங்கம் தலைமையிடம்), சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுதா (சேத்துப்பட்டு தலைமையிடம்), கலசப்பாக்கம் தேர்தல் பிரிவு கே.துரைராஜ் (கலசப்பாக்கம் தலைமையிடம்) ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 14 துணை வட்டாட்சியர்களும் உடனடியாக புதிய பணியிடங்களில் சேர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!