வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் நடைபெற்ற மாணவர்களுக்கான 20 நாள் இலவச கோடைகால சிறப்பு பயிற்சிகள் ( ஓவியம்/ இந்தி/யோகா/கணினி/திருக்குறள் வகுப்பு/தன்னம்பிக்கை பயிற்சிகள்) நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். தன்னம்பிக்கை பயிற்சியாளர் கேசவராஜ் வரவேற்றார். வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் அ.மு. உசேன், பிரம்ம குமாரி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, தெள்ளாறு கல்வியியல் கல்லூரியின் இயக்குநர் திரு M.S . தரணிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 63 மாணவர்களுக்கு ” வளர் இளம் மேதை” விருதுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு தெள்ளார் இராஜா நந்திவர்மன் கல்லூரி இயக்குநர் திரு S. அப்பாண்டைராஜன் பரிசுகள் வழங்கி பேசினார். மேலும் SRM கணினி மைய நிர்வாகி எ. தேவா, ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன், இசையாசிரியர் டி.பி. வெங்கடேசன், தியாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவ…மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோடைகால பயிற்சி பெற்ற மாணவர்களில் 50 பேர் நூலக உறுப்பினர்களாக சேர்ந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியர் சதானந்தன் வழங்கினார். விழா முடிவில் மைய ஆசிரியர் பூபாலன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!