வந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் வரும் 17, 18-ஆம் தேதிகளில் வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி தொடங்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்ப்பதற்கான ஜமாபந்தி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 1427-ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. திருவண்ணாமலை வட்டத்தில் வரும் 17-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது.
ஆரணி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் வரும் 17-ஆம் தேதியும், செங்கம் வட்டத்தில் திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸவரி தலைமையில் வரும் 17-ஆம் தேதியும், தண்டராம்பட்டு வட்டத்தில் மாவட்ட பழங்குடியினர் நலத் திட்ட அலுவலர் தலைமையில் வரும் 18-ஆம் தேதியும் ஜமாபந்தி தொடங்குகிறது.
இதேபோல, போளூர் வட்டத்தில் வரும் 17-ஆம் தேதி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா தலைமையிலும், கலசப்பாக்கம் வட்டத்தில் ஆரணி கோட்டாட்சியர் தலைமையிலும், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் வரும் 17-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், செய்யாறு வட்டத்தில் வரும் 17-ஆம் தேதி கலால் உதவி ஆணையர் தண்டாயுதபாணி தலைமையிலும், வெம்பாக்கம் வட்டத்தில் வரும் 17-ஆம் தேதி செய்யாறு கோட்டாட்சியர் தலைமையிலும், வந்தவாசி வட்டத்தில் வரும் 17-ஆம் தேதி மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.பானு தலைமையிலும் ஜமாபந்தி தொடங்குகிறது.
இதேபோல, சேத்துப்பட்டு வட்டத்தில் வரும் 18-ஆம் தேதி மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், ஜமுனாமரத்தூர் வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையிலும் ஜமாபந்தி தொடங்குகிறது. இந்த ஜமாபந்தியில் அந்தந்த வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!