செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கல்லூரியில் காலை, மாலை எனச் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு இளநிலை வரலாறு, பொருளியல், தமிழ் இலக்கியம், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணிப்பொறி அறிவியல், கணினிப் பயன்பாட்டியியல் ஆகிய பாடப் பிரிவுகள் தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்த இளநிலை பட்ட வகுப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் திங்கள்கிழமை (மே 7) முதல் விநியோனிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்ப படிவங்களை கல்லூரி பணி நாள்களில் காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 50. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அசல் சாதிச் சான்று, சான்றொப்பமிட்ட சாதிச் சான்றின் நகலை அளித்து ரூ. 2 பதிவுக் கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 30-ஆம் தேதி 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!