விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து காஷ்மீர் வரை பயணம்

விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருவண்ணாமலையில் இருந்து, காஷ்மீர் வரை, இருவர் பைக்கில் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், படவேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், 24. இவருக்கு சொந்தமான நிலம் தண்ணீர் இல்லாததால், பல ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயத்தை பாதுகாக்கவும், நதிகளை இணைக்கவும் வலியுறுத்தி அவர், தன் பல்சர் பைக்கில், திருவண்ணாமலையில் இருந்து காஷ்மீர் வரை, ஒரு மாதத்தில் சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்தார். திருவண்ணாமலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு பைக் பயணத்தை, கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார். அவரது நண்பர் மற்றொரு ராஜ்குமார், 30; என்பவரும் பைக்கில் சென்றுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!