திருவண்ணாமலையில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

திருவண்ணாமலையில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருவதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருவண்ணாமலை மாவட்ட பிரிவு சார்பில் நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதம் வரை இப்பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மாணவ, மாணவிகள், ஆண், பெண் என அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். இதில் சேருவதற்கு பயிற்சி கட்டணமாக 1200 செலுத்த வேண்டும். 12 நாட்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். மாணவ, மாணவிகள் நீச்சல் உடையில் நீச்சல் பயிற்சி பெற வேண்டும். திங்கட்கிழமை விடுமுறையாகும். தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரையும், பின்னர் 8 மணி முதல் 9 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04175 233169 என்ற எண்ணில் ெதாடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரா.ஜெயக்குமாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!