திருவண்ணாமலை மாவட்டத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய கவர்னர் வருகை

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்  2 நாள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இன்று  இரவு வருகிறார். நாளை திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறார்.

நாளை காலை 10 மணி முதல் 11.30 மணி வரை தூய்மை இந்தியா திட்டப்பணியை கவர்னர் ஆய்வு செய்கிறார்.

காலை 11.45 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். அதன் பிறகு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் 2.15 மணி முதல் 3.30 மணி வரை பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

மாலை 3.35 மணி அளவில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு தென் மாநில சன் மார்க்க சங்கம் மற்றும் வள்ளலார் அருட்பணி நிலையம் இணைந்து நடத்தும் உலக சமாதான மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். மாலை 4.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கலெக்டர் கந்தசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர், கவர்னர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் அவர் தங்கும் விருந்தினர் மாளிகை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!