திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு மார்ச் 17-ல் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை – 3, முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஒளிப்பட நகல் எடுப்பவர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வும், அலுவலகக் காவலர் பதவிக்கான நேர்காணலும் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
எனவே, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் உரிய சான்றிதழ்கள், வருகைச் சீட்டு படிவத்தைப் பூர்த்தி செய்து வரும் 17-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆஜராக வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை, 2 பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்கள், வேலை வாய்ப்பு அலவலகப் பதிவு அட்டை, முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ், முன் அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ், கார் ஓட்டுநர்கள் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பெற்ற சான்றிதழ், பதிவுத்தபால் ஒப்புகை அட்டை அல்லது அஞ்சலக ரசீது, ஒளிப்பட நகல் எடுப்பவர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான முன் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை மூலம் தகுதி, திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். மனுக்கள் பெறப்பட்ட தேதியைப் பொருத்து விண்ணப்பங்களின் வரிசை கொடுக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் வரிசை எண்களை திருவண்ணாமலை நீதிமன்ற இணையதளத்தில் (இ.கோர்ட் வெப்சைட்டில்) சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வருகைச் சீட்டு எடுத்து வர வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறித்த பட்டியலை w‌w‌w.‌e​c‌o‌u‌r‌t‌s.‌g‌o‌v.‌i‌n/‌t‌n/‌t‌i‌r‌u‌v​a‌n‌n​a‌m​a‌l​a‌i​ என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!