திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுமானம், அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்கள் தங்களது பதிவை புதுப்பிக்க ஜனவரி 31-ஆம் தேதி கடைசி-தொழிலாளர் நல அலுவலர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுமானம், அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்கள் தங்களது பதிவை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல அலுவலர் செந்தில்குமரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர் நல வாரியம், தையல் தொழிலாளர் நல வாரியம், முடி திருத்துவோர் நல வாரியம், சலவைத் தொழிலாளர் நல வாரியம், பனை மரத் தொழிலாளர் நல வாரியம், காலணி, தோல் பொருள்கள் உற்பத்தி, தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியம், ஓவியர் நல வாரியம், பொற்கொல்லர் நல வாரியம் உள்பட 17 நல வாரியங்கள் உள்ளன. இவற்றில் தமிழகம் முழுவதும் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுமானம், அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, பதிவை புதுப்பிக்கத் தவறிய தொழிலாளர்கள் தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!