செய்யாரில் தேர்த் திருவிழா

செய்யாறு – திருவோத்தூர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ரத சப்தமி விழா (தேர்த் திருவிழா) புதன்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் பத்து நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் ஜனவரி 18 -ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதன் தொடர் நிகழ்வாக 7-ஆம் நாள் ரத சப்தமி விழா நடைபெறும்.
அதன்படி, புதன்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் ரத சப்தமி புறப்பாடு நடைபெறுகிறது. இதில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து மாலை நடைபெறும் தேர் வலம் வரும் நிகழ்ச்சியில் செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. செஞ்சி வெ.ஏழுமலை, வருவாய் கோட்டாட்சியர் பொன்.கிருபானந்தம், அறநிலையத் துறை இணை ஆணையர் இரா.ஞானசேகரன், உதவி ஆணையர் சு.மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!