நடிகர் ஜெகனின் கார் மோதி இளைஞர் பலி!

நடிகர் ஜெகனின் கார் மோதி வந்தவாசி அருகே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜெகன் ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவர் வந்தவாசி வழியாக சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் தர்கா அருகே உள்ள தாழம்பள்ளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.  இதில் ஹுசைன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

ஹுசைன் மினி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஜெகனின் கார் மோதி உயிரிழந்தார்.    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியில் விபத்துகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!