திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19,62,843 வாக்காளர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில்,  புதிதாக 13 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 15 ஆயிரத்து 267 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் என மொத்தம் 28 ஆயிரத்து 327 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் 18, 19 வயதுடைய 9 ஆயிரத்து 5 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 180 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 4 பேர் என 16 ஆயிரத்து 189 இளம் வாக்காளர்கள் அடங்குவார்கள். அதன்படி நமது மாவட்டத்தில் 19 லட்சத்து 62 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர்.

இறப்பு, இரு முறைப்பதிவு, இடமாற்றம் ஆகிய காரணங்களால் 14 ஆயிரத்து 245 ஆண் வாக்காளர்களும், 17 ஆயிரத்து 171 பெண் வாக்காளர்களும் என 31 ஆயிரத்து 416 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!