மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 14 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 காவல் உள்கோட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் தொடர்ந்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 14 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. 2 நாளில் மொத்தம் 944 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!