வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம்

இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் “நாமும் சுற்றுச்சூழலும்” கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். ஸ்ரீராமகிருஷ்ண மடம் சிறப்பாசிரியர் சதாசிவம் வரவேற்றார். யுரேகா கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் க. முருகன் முன்னிலை வகித்தார். கருத்தாளராக, வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு. ரகு பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக, வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் சுற்றுச்சூழலை மாணவர்களாகிய நீங்கள் தான் அதிகம் பாதுகாக்க வேண்டும் எனவும், மரங்களை அதிகம் நட்டு அதை பராமரித்தல் அவசியம் பற்றியும் விளக்கினார். மேலும் 101 மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கினார். செட் இப் பவுண்டேஷன் நிர்வாகி கேசவராஜ் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!