திருவண்ணாமலை மாவட்டத்தில் 1400 பள்ளி செல்லா குழந்தைகள்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, ஏப்., மற்றும் மே மாதங்களில் நடப்பது வழக்கம். அதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, கடந்த, ஏப்., 16 முதல் துவங்கி நடந்து வருகிறது. இப்பணி வரும், 28 வரை நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2018 – 19ம் ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணியில், 240 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆறு வயது முதல், 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், இடம் பெயர்ந்த குழந்தைகள் என, தனித்தனியாக கணக்கெடுக்கின்றனர். நேற்று வரை, பள்ளி செல்லா குழந்தைகள், 1,400 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை, மீண்டும் பள்ளிகளில் சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!