வந்தவாசியில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடந்த ஒரு மாதமாக அதிக வெப்பம் வாட்டி வந்த நிலையில், இன்று மாலை சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. வந்தவாசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புறப்பகுதிகளான சென்னாவரம், பிருதூர், அம்மையப்பட்டு, மும்முனி மற்றும் பாதிரி பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர் உயரும் என விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!