சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
11-வது ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. காவிரி பிரச்னைக்கிடையே தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகளின் மிகப் பெரிய போராட்டத்துக்கு இடையே போட்டி இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
கடைசியில் 2 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் ஜடேஜா சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.