கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 1,600 கட்டண தரிசன டிக்கெட்டுகள்: இணையதளத்தில் பதிவு செய்யலாம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான (பரணி தீபம், மகா தீபம்) கட்டண தரிசன டிக்கெட்டுகளை வியாழக்கிழமை (நவம்பர் 30) முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 2 -ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.

பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன .
இந்த டிக்கெட்டுகள் இத்தனை ஆண்டுகளாக கோயிலில் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு விற்கப்படும்.
இந்த ஆண்டு முதல் முறையாக இணையதளத்தில் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளைப் பெற கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
1,600 டிக்கெட்டுகள்: பரணி தீபத்துக்காக ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் 500 வழங்கப்படவுள்ளன.
இதேபோன்று, மகா தீபத்துக்கு ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் ஆயிரமும், ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகள் நூறும் என மொத்தம் 1,600 சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகளை விற்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த டிக்கெட்டுகளை வியாழக்கிழமை முதல் கோயில் இணையதளங்களான w​‌w‌w​.​a‌r‌u‌n​a​c‌h​a‌l‌e‌s‌w​a‌r​a‌r‌t‌e‌m‌p‌l‌e.‌t‌n‌h‌r​c‌e.‌i‌n, w‌w‌w.‌t‌n‌t‌e‌m‌p‌l‌e.‌o‌r‌g​ என்ற இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்துக்கு வரும்போது முன்பதிவு செய்த டிக்கெட்டின் நகல், புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!