திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: ஆட்டோ கட்டணம் நிர்ணயம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, பொதுமக்கள் நலன் கருதி ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியந்தல் தாற்காலிகப் பேருந்து நிலையம் முதல் அரசுக் கலைக் கல்லூரி மைதானம் வரையும், அத்தியந்தல் தாற்காலிகப் பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரையும், திருக்கோவிலூர் சாலை முதல் அத்தியந்தல் வரையும் தனி நபர் ஆட்டோ கட்டணமாக ரூ. 20 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இதேபோல், வேட்டவலம் தாற்காலிகப் பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் சாலை தாற்காலிகப் பேருந்து நிலையம் வரையும், திருக்கோவிலூர் தாற்காலிகப் பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரையும், மணலூர்பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரையும், அரசுக் கலைக் கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரையும் தனி நபர் கட்டணமாக ரூ.15 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், திண்டிவனம் சாலை தாற்காலிகப் பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரையும், திண்டிவனம் சாலை தாற்காலிகப் பேருந்து நிலையம் முதல் காந்தி நகர் பைபாஸ் சாலை 6 -ஆவது குறுக்குத் தெரு வரையும், நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோயில் வரையும், பச்சையம்மன் கோயில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரையும் தனி நபர் கட்டணமாக ரூ. 15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண நிர்ணயம் மகா தீபத் திருவிழாவுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், தாற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப் பாதைக்கு வரும் பக்தர்களுக்கு இலவசப் பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!