திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஈமச்சடங்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஈமச்சடங்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் யாரேனும் இறந்தால் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகள் மூலம் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2017–18ம் நிதி ஆண்டிற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் இந்த உதவித்தொகையினை வழங்கிட ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, நடப்பு 2017–18ம் நிதி ஆண்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பில் எவரேனும் இறந்தால் அன்னாரின் குடும்பத்தினர் ரூ.2 ஆயிரத்து 500 உதவித்தொகையினை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த மானியத்தை பெற்று கொள்ளலாம்.

இந்த நிதி ஒதுக்கீட்டினை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அனைத்து தகுதி உள்ளவர்களுக்கு உரிய முறையில் கிராம ஊராட்சிகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!