நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி வழங்கும் மகுடம் விருதுகள்

<நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, மகுடம் விருதுகள் என்ற பெயரில் பல்வேறு துறைகளில் திறன் மிக்கவர்களாக உள்ள தமிழர்களை சிறப்பிக்க உள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன், "சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், கலை-இலக்கியம் என எல்லா தளங்களிலும் உள்ள ஏராளமான சாதனைத் தமிழர்களை அடையாளம் காண்பதும், அங்கீகரிப்பதும் அவசியமானது. அப்போதுதான் தமிழ்த் திறமை அடுத்தக் கட்டத்துக்கு உயரும். இதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டின் முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளில் ஒன்றான ‘நியூஸ்18 தமிழ்நாடு’, ‘மகுடம்’ என்ற விருது விழாவை நடத்தவிருக்கிறது" என்றார். www.magudamawards.com என்ற பிரத்யேக இணையதளத்திலும், News18TamilNadu முகநூல் பக்கத்திலும் ‘மகுடம்’ விருதுகள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!