BREAKING NEWS | திருவண்ணாமலை ஆட்சியராக கே.எஸ். கந்தசாமி நியமனம்..
திருவண்ணாமலை ஆட்சியராக கே.எஸ். கந்தசாமி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், சேலம், சிவகங்கை, கடலூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளது.
அதன் படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு. வடநேரே கடலூர் ஆட்சியராக மாற்றப்பட்டார். சென்னை துணை ஆணையராக இருந்த கந்தசாமி, திருவண்ணாமலை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.