கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்போர் அரசு, அரசு உதவிபெறும், மாநில – மைய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2017 – 2018ஆவது கல்வியாண்டில் படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

அதன்படி, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையும், ஐடிஐ, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு படிப்போருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிப்போருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.

இந்த உதவித்தொகைகளை பெற விரும்புவோர், w‌w‌w.‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!