செங்கம் அருகே அனுமதியின்றி எருது விடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே போலீஸ் அனுமதியை மீறி எருது விடும் விழா நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கம் அருகே எருது விடும் விழா நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை சுட்டிக்காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் தடையை மீறி எருது விடும் விழா நடைபெற்றது. இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீரலூர், மேல்சோழனங்குப்பம் கிராமங்களில் போலீசாரின் தடையை மீறி எருது விடும் விழா நடைபெற்றது. கயிற்றிலிருந்து கழற்றி விடப்பட்ட மாடுகள் மிரண்டு அங்கும் இங்குமாக ஓடின. ஜல்லிக்கட்டு பாணியில் இளைஞர்கள் மாடுகளை விரட்டி சென்றனர். இதை காண ஏராளமான மக்கள் அப்பகுதியில் கூடினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!