மாதம் பல லட்சங்களை சம்பாதிக்க 30 ‘ருசியான’ ஐடியா

இன்றைய இளைஞர்கள் கடுமையான வேலைச் சுமையில் இருக்கும் காரணத்தால் மன அழுத்தத்தைக் குறைக்கப் பல முயற்சிகள் செய்கிறார்கள், குறிப்பாகக் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கப் பின்பற்றும் ஆரோக்கியமான வழிகளில் ஒன்று உணவு. உதாரணமாகக் கடுப்பாகும் போது ஒரு பிரியாணி, சந்தோஷமாக இருக்கும்போது ஒரு பிரியாணி, போர் அடிச்சா ஒரு பிரியாணி, வீக்கென்ட் ஆன பிரியாணி. இப்படிப் பலர் பல விதமாக உள்ளனர்.

இப்படி உணவு பிரியராக இருக்கும் மக்களின் எண்ணிக்கை இன்று ஏராளம். மன அழுத்தம் அதிகம் தரும் வேலையில் இருந்துகொண்டோ அல்லது முழுமையாக வேலையை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடித்தமான உணவு துறையில் தொழில் துவங்க சூப்பரான ஐடியா உள்ளது.

1. ஹோட்டல்
உணவு தொழில் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஹோட்டல் தொழில் தான். இதற்குத் தீவிர முதலீடும், குறிப்பிட்ட அளவு திட்டமிடலும் அவசியம். அதோடு ஒட்டலுக்குச் சமையல் மாஸ்டரின் கைபக்குவம் மு க்கியமானது. அதனால் சிறந்த சமையல் மாஸ்டரை தேர்வு செய்ய வேண்டும். ஓட்டல் தொழிலில் வெற்றி பெற சற்றுக் காலத் தாமதம் ஆகும். இதற்குப் பொறுமை முக்கியம்.

2. பேக்கரி
இரண்டாவதாகப் பேக்கரி தொழிலை தேர்வு செய்யலாம். இதைத் தொடங்க முடிவு செய்துவிட்டால் உங்களது முதல் கவனம் பிரட், பிஸ்கட் வகைகளைச் சிறந்த செய்முறையுடன் தயாரிப்பதில் இருக்க வேண்டும். பே க்கரியை நீங்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ தொடங்கலாம்.

3.கேட்டரிங் சர்வீஸ்
உங்களிடம் சிறந்த திட்டமும், மக்களைக் கையாளும் திறனும் இருந்தால் சொந்தமாகக் கேட்டரிங் தொழிலை தொடங்கலாம். ஆரம்பத்தில் சிரமமாகத் தான் இருக்கும். படிப்படியாக நீங்கள் இதைச் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள்.

4.சாக்லேட் தயாரித்தல்
நீங்கள் சாக்லேட் பிரியராக இருந்தால் இந்த ஆலோசனை உங்களுக்குச் சரியானதாக இருக்கும். குறைந்த செலவில் சாக்லேட் தயாரிக்கும் தொழிலை தொடங்கிவிடலாம். வீட்டில் இருந்தே இந்தத் தொழிலை செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

5. சமையல் வகுப்பு
பெண்களுக்குச் சமையல் செய்யச் சொல்லிக் கொடுக்கலாம். உணவு தொழிலில் செய்ய இது சிறந்த வழியாகும். இதை வீட்டிலேயே செய்யலாம். இதற்குக் குறைந்த முதலீடு மட்டுமே தேவைப்படும்.

6. உணவு வாகனம்
வாகன உணவு தொழில் என்பது தற்போது வேகமாக வளர்ந்து வரக் கூடிய தொழிலாகும். குறைந்த முதலீட்டில் இந்தத் தொழிலை தொடங்கலாம். பொருத்தமான வாகனம் மற்றும் கச்சா பொருட்கள் இருந்தாலே இந்தத் தொழிலை தொடங்கிவிடலாம்.

7.ஐஸ்கிரீம் கடை
அடுத்த உணவு தொழில் ஆலோசனையாக வருவது ஐஸ்கிரீம் கடை தான். இது எப்போதும் செழிப்பமாக இருக்கக் கூடிய தொழில். குறைந்த முதலீட்டில் இதைத் தொடங்கலாம். பிரபலமான ஐஸ்கிரீம் நிறுவனத்தின் ஏஜென்சி பெற்று தொடங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.

8. ஜூஸ் கடை
ஐஸ் கிரீம் கடையுடன் இணைந்து ஜூஸ் கடையைத் தொடங்கலாம். அல்லது தனியாகவும் தொடங்கலாம். உணவு சார்ந்த தொழிலில் ஜூஸ் கடை முக்கியமான ஆலோசனையாகும்.

9.பலகார கடை
பல கார வகைகள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது பிரபலமாகி வருகிறது. மக்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும். ஆனால் இதை வீட்டில் செய்வதற்குப் பதிலாகக் கடையில் வாங்கிச் சாப்பிடுவதைத் தான் அதிகம் விரும்புவார்கள். அதனால் பலகார கடைகள் லாபகரமான தொழிலாகும்.

10. இனிப்புக் கடை
அடுத்த லாபகரமான உணவு தொழில் என்றால் இனிப்பு கடைகளைக் கூறலாம். பண்டிகை மற்றும் இதர நிகழ்வுகளின் போது இனிப்பு வகைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கும். அதனால் இனிப்புக் கடைகள் தொடங் குவது நல்ல தொழிலாகும். கடை தொடங்குவதற்கு முன்பு சந்தை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய வேண் டும்.

11. பால் சார்ந்த பொருட்கள்
பால் சார்ந்த உணவு பொருட்களைத் தயாரிப்பது சிறந்த தொழிலுக்கான ஆலோசனையாகும். அமுல், மதர் டெய்ரி போன்ற பெரிய பால் நிறுவனங்களின்முகமை எடுக்கலாம். அல்லது நீங்கள் சொந்தமாகப் பால் சார்ந்த பொருட்களைத் தயாரிக்கலாம்.

12. ஃபாஸ்ட் புட் கடைகள்
நவீன காலத்தில் ஃபாஸ்ட் புட் கடை என்பது சிறந்த உணவு தொழிலுக்கான ஆலோசனையாகும். இளைஞர்கள் காலை உணவு அல்லது இரவு உணவுக்கு ஃபாஸ்ட் புட் கடைகளைத் தேர்வு செய்யும் வழக்கம் உள்ளது. இங்கும் நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முகமை எடுத்து நடத்தலாம்.

13. சீன உணவு கடை
நீங்கள் சொந்தமாகச் சீன உணவு கடை தொடங்க திட்டமிடலாம். ஆனால், உரிய சந்தை ஆய்வை மேற்கொண்ட பின்னரே இதைத் தொடங்க வேண்டும். கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள பகுதிகளில் இதைத் தொடங்க வேண்டும்.

14. இயற்கை உணவு கடை
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவோர் இயற்கை உணவு கடைகளைத் தேடி வரும் நிலை தற்போது உள்ளது. அதனால் இயற்கை உணவு கடை திறப்பது சிறந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

15. அப்பளம் தயாரித்தல்
வீட்டில் இருந்தே அப்பளம் தயாரிக்கும் தொழிலை தொடங்கலாம். எந்த ஒரு தனி நபரும் குறைந்த முதலீட்டுடன் இந்தத் தொழிலை தொடங்கலாம். உணவுக்குச் சிறந்த நொறுக்குத் தீனியாக அப்பளம் விளங் குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஊறுகாய் தயாரித்தல்
வீட்டில் இருந்தே சிறிய தொழிலாகக் குறைந்த முதலீட்டில் ஊறுகாய் தயாரிக்கலாம். ஊறுகாய் என்பது மிகவும் பிரபலமான பொருளாகும். உள்ளூர் சந்தை வாய்ப்புகளை விட ஊறுகாய்க்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் உள்ளது.

17. ஜாம் ஜெல்லி தயாரித்தல்
உணவு சார்ந்த பொருட்களான ஜாம் மற்றும் ஜெல்லி வகைகளை வீட்டிலேயே தயாரித்துத் தொழில் செய்யலாம். குறைந்த முதலீடு தான் தேவைப்படும். பிரட் ஸ்ப்ரெட் அல்லது கேக் அண்டு கூக்கிஸ்க்குத் தேவைப்படும். இது லாபகரமான தொழில்.

18. பிஸ்கட் தயாரித்தல்
உணவு சார்ந்த லாபகரமான அடுத்தத் தொழில் என்று சொல்ல வேண்டும் என்றால் அது பிஸ்கட் தயாரித்தல் தான். இதை வீட்டில் இருந்தும் செய்யலாம். அல்லது சொந்தமாகத் தானியங்கி பிஸ்கட் தயாரிக்கும் நிலையத்தை ஏற்படுத்தியும் செய்யலாம்.

19. சாஸ் தயாரித்தல்
பிரட் ஸ்ப்ரெட் மற்றும் ஃபாஸ்ட் புட் வகைளுக்குச் சாஸ் பயன்படுத்தப்படுகிறது. தக்காளி, மிளகாய் சாஸ் என்று இதில் பல வகைகள் உள்ளது. சந்தையின் தேவை மற்றும் முதலீட்டிற்கு ஏற்ப இந்தத் தொழிலை தொடங்கலாம்.

20. டெஸ்ஸர்ட் கடை
தற்போது சிறந்த மற்றம் மிகவும் பிரபலமான உணவு தொழிலாக டெஸ்ஸர்ட் கடைகள் உள்ளது. கேக் மற்றும் டெஸ்ஸர்ட் போன்றவை அனைத்து விதமான பார்ட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறது. உங்களால் ருசியான கேக் வகைகளைத் தயாரிக்க முடியும் என்றால் இந்தத் தொழிலையும் நீங்கள் ருசிக்கலாம்.

21. மளிகை கடை
உணவு தொழிலுக்கு அடிப்படையான மளிகை கடை தொடங்கலாம். யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலை சிறிய கடையில் தொடங்கலாம். இந்தத் தொழிலை தொடங்குவதற்கு முன்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

22. ஊட்டச்சத்து பயிற்சியாளர்
நீங்கள் நல்ல உடல் திறன் மற்றும் சிறந்த உணவு பழக்கத்தைக் கொண்டிருந்தால் ஊட்டச்சத்துப் பயிற்சியாளராகலாம். இந்தத் தொழிலை தேர்வு செய்வதற்கு முன்பு முறையான பயிற்சி எடுக்க வேண்டும்.

23. காபி கடை
டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. காபி கடை என்ற உணவு தொழிலுக்கு இது உயிர் கொடுக்கக் கூடியதாகும். இதற்கு மிதமான முதலீடு போதுமானது.

24. தானியம் சார்ந்த பொருட்கள் தயாரித்தல்
அரிசி ஆலை, மாவு தயாரித்தல் போன்ற தானிய செயலாக்க தொழிலுக்கு அதிக முதலீடு தேவைப்படும். இதற்கு ஏற்ற அறிவும், முதலீடும் இருந்தால் இந்தத் தொழிலை தொடங்கலாம்.

25. உணவு விநியோக சேவை
முதல் ஆன்லைன் தொழில் என்பது உணவு விநியோக சேவை தான். இதைத் தொடங்க ஒரு பிரத்யேக இணையதளம் வேண்டும். அதோடு உங்கள் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்துடன் தொடர்பு ஏற்ப டுத்திக் கொள்ள வேண்டும். உணவு வியோகத்திற்குக் கமிஷன் வசூல் செய்து கொள்ள வேண்டும்.

26. பழம் மற்றும் காய்கறி அங்காடி
பழம் மற்றும் காய்கறி அங்காடி தொடங்குவது உணவு தொழில்களில் ஒன்றாகும். இதை மொத்தம் அல்லது சில்லறை விற்பனையில் செய்யலாம்.

27. தேன் சுத்திகரித்தல்
தேனில் உள்ள மெழுகு மற்றும் இதர தேவையற்ற பொருட்களை அகற்றுவது தான் தேன் சுத்திகரிப்பாகும். இதை நீங்கள் 2 வழிகளில் மேற்கொள்ளலாம். ஒன்று மனிதர்கள் மூலம் கைகளாலும், மற்றொன்று மின்சார எந்திரம் மூலமும் செய்யலாம்.

28. பதப்படுத்தப்பட்ட இறைச்சி அல்லது கடல் உணவு
பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவுக்கு எப்போது தேவை அதிகம் இருக்கும். இந்தத் தொழிலில் உணவு ரசாயன அடிப்படையில் பதப்படுத்தப்படுகிறது. அதனால் இதற்குப் பெரிய அளவில் முதலீடு தேவைப்படும்.

29.பாப்கார்ன் அல்லது சிப்ஸ் தயாரித்தல்
பாப்கார்ன் மற்றும் சிப்ஸ் வகைகள் சிறந்த நொறுக்குத் தீனிகளாகும். இது அனைத்து வயதினருக்குத் தேவைப்படக் கூடியதாகும். குறைந்த செலவில் இந்தத் தொழிலை தொடங்கலாம். ஆனால், இதைச் ச ந்தைப்படுத்த அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

30. விவசாயம்
கடைசியாக உணவு சார்ந்த தொழிலாக விவசாயம் உள்ளது. இதை மொத்தமாகப் பெரிய அளவில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு மற்றும் தொழில் தொடங்க உதவிகளுக்கு : 7806971117 / 04182220042
நன்றி : ஓன் இந்தியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!