திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள்) சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்தக் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் விண்ணப்ப விநியோகத்தைத் தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கினார்.
பின்னர், அவர் கூறியதாவது: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக ஆயிரம்  விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும் கூடுதல் விண்ணப்பங்கள் தேவைப்பட்டால், வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.
விண்ணப்பங்களை நேரில் பெற விரும்பும் மாணவர்கள் ஜூன்
18-ஆம் தேதி மாலை 5 மணி வரை வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் குப்புராஜ்,  மயக்கவியல் நிபுணர் ஸ்ரீதரன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!