நர்சிங் தெரபி பட்டயம் பெற்றவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவை சரிபார்த்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நர்சிங் தெரபி பட்டயம் பெற்றவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
சென்னை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், மருத்துவமனைகளில் காலியாக உள்ள தெரபட்டிக் அசிஸ்டென்ட் (ஆண், பெண்) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதி வாய்ந்த பதிவுதாரர்களின் பட்டியல் பரிந்துரை செய்யப்பட உள்ளது. இந்தப் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் சென்னை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இரண்டரை ஆண்டு கால அளவு கொண்ட நர்சிங் தெரபி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
இந்தக் கல்வித் தகுதி பெற்று திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் கல்வித் தகுதி, பதிவு விவரங்களை சரிபார்த்து பரிந்துரை செய்யப்பட வேண்டியுள்ளது.
எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்று, மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் அலுவலக வேலை நாள்களில் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகலாம். தவறும் பட்சத்தில் தங்களுடைய பெயர் பரிந்துரைப் பட்டியலில் சேர்க்கப்பட இயலாது என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!