இந்திய விமானப் படையில் வேலை

தஞ்சாவூரில் நடைபெறும் இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கான நேரடித் தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கான நேரடித் தேர்வு வருகிற ஜூன் 2-ஆவது வாரத்தில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் விருப்பமும், தகுதிகளும் உள்ள திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்தத் தேர்வில் கலந்து கொள்ள எவ்வித விண்ணப்பமும் அளிக்கத் தேவையில்லை. தேர்வு நடைபெறும் நாளில் அனைத்து அசல் சான்றுகளுடன் நேரடியாகச் சென்று கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
தகுதியான திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் இந்த நேரடித் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!