திருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படை வீரர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, நல்ல ஆரோக்கியம், திறமையுடன் 45 முதல் 60 வயதுக்கு உள்பட்டவர்கள் இந்தப் பணியில் சேர்க்கப்படுவர்.
விண்ணப்பதாரர் 40 முதல் 50 வயதுக்கு உள்பட்டவராக இருப்பின் மிகவும் நல்லது.
மாவட்டம் முழுவதும் 91 பணியிடங்கள் காலியாக உள்ளன. கோயில்களுக்கு அருகே வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படை வீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை நகல், கைபேசி (ம) தொலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் இயங்கும் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வந்து தங்களது பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!