வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு முகாமை வரும் 27-ஆம் தேதி நடத்துகின்றன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில், 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள், 5-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டம், ஐடிஐ, பாலிடெக்னிக் கல்வித் தகுதிகளைக் கொண்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் கலந்து கொள்ள வருவோர் தங்களது 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை, சாதிச் சான்று, கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகல்களை எடுத்து வர வேண்டும். முகாமில் கலந்து கொள்பவர்களும், வேலை தேடுபவர்களும் இணையதள முகவரியில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை.
தனியார் துறையில் வேலை பெறுவோரின் அரசுப் பணிக்கான பதிவு மூப்பு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04175233381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!