திருவண்ணாமலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் நலன் கருதி, கல்வித் தகுதிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் நோக்கில், தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – திறன் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த முகாமின் தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 5-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை, ஐடிஐ, பாலிடெக்னிக் கல்வித் தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
முகாமுக்கு வருவோர் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 4, குடும்ப அட்டை, சாதிச் சான்று, கல்வித் தகுதி சான்றுகளின் நகல்களுடன் வர வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் w‌w‌w.‌n​c‌s.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04175 – 233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!