புதுச்சேரியில் பிப்ரவரி 3 ஆம் தேதி ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்

புதுச்சேரியில் பிப்ரவரி 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
சென்னை ராணுவ ஆள் சேர்ப்பு மண்டல தலைமை அலுவலகம் சார்பில், பிப்ரவரி 3 முதல் 12-ஆம் தேதி வரை ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் புதுச்சேரியில் நடைபெறுகிறது.
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சென்னை, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!