திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐடிஐ -ல் சேருவதற்கு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு பயிற்சி துறையின் கீழ் அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) இயங்கி வருகின்றன. அவற்றில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு மூலம் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். தொழிற்பிரிவுகளுக்கு மதிப்பெண், இனசுழற்சி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
எனவே அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ‘ஆன்லைனில்’ பதிவேற்றம் செய்து வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 ஆண்டு தொழிற் பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு தொழிற்பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது வரம்பு 14 முதல் அரசு நிர்ணயித்தவாறு இருக்கலாம்.
பழங்குடியின மாணவர்கள்…

இது தவிர ஜமுனாமரத்தூரில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர பழங்குடியின மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சேர விரும்பும் பழங்குடியின மாணவர்களும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம். ஜமுனாமரத்தூர் பழங்குடியின அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் நிலைய முதல்வரை போனிலும் நேரிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!