ட்ரெண்டிங்கில் விஜய் 62 போட்டோ ஷூட் ! #Thalapathy62

நடிகர் விஜயின் 62-வது படத்திற்கான போட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி இணைந்துள்ளது. பெயரிடப்படாத இந்தப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், படத்திற்கான ஃபோட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. போட்டோ ஷூட் தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், #Thalapathy62 என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

விஜய் 62-வது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பொங்கலுக்கு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!