பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள், நெல் சொர்ணவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.504 வீதம் வரும் வரும் 31-ஆம் தேதிக்குள்ளும், மானாவாரி நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.450 வீதம் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள்ளும் காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்யலாம்.
குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பயனடையலாம். வங்கியில் கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாக இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுவிடுவர்.
கடன் பெறாத விவசாயிகள், அருகில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மூலம் காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்தலாம்.
தேவையான ஆவணங்கள்: சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல் போன்ற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் விரைந்து பொது சேவை மையங்களை அணுகி பயிர்க் காப்பீடு செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!