மானியத்தில் நீர்ப் பாசனக்  கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மானியத்தில் வழங்கப்படும் நீர்ப் பாசனக்  கருவிகளை பெற அனக்காவூர் வட்டார விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  தெரிவித்தார்.
இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனக்காவூர் வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சொட்டு நீர்ப் பாசனக் கருவி, தெளிப்பு நீர்ப் பாசனக் கருவி ஆகியன விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகின்றன.
கரும்புப் பயிருக்கு சொட்டு நீர்ப் பாசனம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.88,747, மானாவாரி பயறு வகைக்கு தெளிப்பு நீர் பாசனத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,780, நீர் தூவான் ஒரு ஹெக்டேருக்கு ரூ.32, 300 வீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மானாவாரி பயிர்களான உளுந்து, காராமணி உள்ளிட்டவற்றை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை, நில வரைபடம் ஆகியவற்றை அனக்காவூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமர்ப்பித்து, மானியத்தில் வழங்கப்படும் நீர்ப் பாசனக் கருவிகளை பெற்றுக் கொள்ளலாம்.
நுண்ணீர் பாசனத்தின் நன்மைகள்: சாதாரண நீர்ப் பாசன முறையைக் காட்டிலும் நுண்ணீர் பாசனத்தின் மூலம் 50 – 65 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது. பயிர் எளிதில் வளர்ச்சி அடைகிறது. அதிக உற்பத்தி, உயர்ந்த தரம், நிலத்தை ஓரளவு சமப்படுத்தினாலே போதுமானது. நடைமுறை நீர் பாசனம் போன்று சரிசமமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஒரு ஏக்கருக்கு தேவையான நீரை இரண்டு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!