விவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் (ஹெல்ப் லைன்) சேவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் விவசாயிகளுக்கான பயிர் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் (ஹெல்ப் லைன்) சேவையைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் துறை தொடர்பான தகவல்கள், பூச்சி மேலாண்மை, உர மேலாண்மை உள்ளிட்ட தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை 9942211044, 7299935543 என்ற எண்களைத் தொடர்புகொண்டு இலவசமாகத் தெரிந்து கொள்ளலாம். இதேபோல, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வழங்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, தங்களது செல்லிடப்பேசிக்கு பயிர் மருத்துவ ஒலி வடிவ குறுஞ்செய்திகளை இலவசமாகப் பெற்று பயன்பெறலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!