சனவரி 29ம் தேதி இயற்கை வேளாண் குறித்த சிறப்பு பயிற்சி முகாம்

திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 29ம் தேதி, இயற்கை வேளாண் குறித்து, சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் அடுத்த, திருவூர் பகுதியில் அமைந்துள்ளது தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலையம். இங்கு, வரும் 29ம் தேதி, இயற்கை வேளாண் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. காலை, 10:00 மணி முதல். மாலை, 5:00 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், இயற்கை வேளாண் சிறப்பியல்புகள், நெறிமுறைகள், பயிர் சுழற்சி, பசுந்தாள் உர மேலாண்மை, இயற்கை உரம், வணிகப் பயிர், உட்பட பல்வேறு வேளாண் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் எடுத்துரைக்கின்றனர்.
மேலும், இயற்கை வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் அதை பாதுகாப்பது, நீர் உயிர் உரங்கள், பயிர் பெருக்கம் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.மேலும், பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு அங்கக வேளாண் சான்றிதழ் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும் விளக்கவுரை நடைபெறும். இந்த பயிற்சியில், சேர விரும்பும் விவசாயிகள், திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், நேரிலோ அல்லது 044-27620705 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு, பயிற்சி கட்டணமாக, 300 ரூபாய் செலுத்தி, தங்களது அலைபேசி எண்ணுடன் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி குறித்த கையேடு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!