கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம்

திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதுக்குறித்து ஆராய்ச்சி மையத் தலைவர் தியோபிலஸ் ஆனந்தகுமார் கூறுகையில், ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி முகாமில், முதலில் வரும் 50 பேருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04175-206577 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!